தடைகளற்ற நினைவுகூரல் சமாதானத்திற்கு இன்றியமையாதது

 

(Washington, DC; 18 May 2017) வைகாசி 18 ஆம் திகதியை வடகிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் ஒன்றிணைந்து தமிழ் இனப்படுகொலை நாளாக  நினைவு கூருகின்றனர். இந்த  நாளில் சிறீலங்கா அரசாங்கத்தின் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள், முக்கியமாக போரின் இறுதிக் காலகட்டத்தில் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் நினைவு கூரப்படுகின்றனர். 2009 ஆம் ஆண்டு அட்டூழியங்கள் நடந்தபோது தமிழ் இனம் எவ்வளவு துன்பத்தையும் துயரத்தையும் அனுபவித்தும் தமது கோரிக்கைகளில் உறுதியாக இருந்ததோ அதே உணர்வுடன் இன்றும் வலுவாக நிற்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் பல மக்கள் ஒன்றிணைந்து இந்த நாளை நினைவுகூருகின்றனர்.

 

எங்கள் துக்கம் இறந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்காக மட்டுமில்லை. தமிழ் மக்கள் மனதில் பல ஆண்டுகளாக எதிர்கால இழப்பைப் பற்றிய துயரமும் இருந்து வருகிறது. சிங்கள பௌத்த பேரினவாத அரசின் அடக்கு முறையற்ற எதிர்காலம் சாத்தியமற்றது. இதுவே தனித் தேசம் வேண்டும் என்ற கோரிக்கையை வலுக்கச் செய்தது. ஆயுத மோதல் முடிவடைந்தது எட்டு ஆண்டுகள் கடந்த போதிலும் எதிர்காலத்தின் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது. அரசியலமைப்பு முறை முடங்கியது. தமிழ் பேசும் மக்களின் நியாயமான குறைக்களை தீர்க்க ஒருதெளிவான புதிய அரசியலமைப்பு முறை உருவாக்கப்படுவது என்பது சாத்தியமற்றது என இதுவரை நடந்த சீர்திருத்த முயற்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.

 

வெற்று வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் இருந்தால் மட்டுமே சிறீலங்கா நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை முன்னோக்கி நகர்த்துவாக கருத்தப்படும். சிறீலங்கா அதன் நிலைப்பாட்டிற்காக விமர்சிக்கப்பட்டாலும் துரதிர்ஷ்டவசமாக சர்வதேச சமூகத்தில் பலர் சிறீலங்காவின் கூற்றுக்களை நம்பி அவர்களுக்கு வெகுமதியளிக்கின்றனர். சிறீலங்கா கடமைகளை நிறைவேற்ற தவறிய போதிலும் ஐரோப்பிய ஒன்றியம்  வர்த்தக முன்னுரிமை அளித்தது இதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.

சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதில் தோல்வியுற்ற நிலையில் நிலையான சமாதான வாய்ப்புக்கள் மிகவும் குறைந்தளவிலேயே காணப்படுகிறன. தொடர்சியான தண்டனையிலிருந்து தப்புதல், இராணுவமயமாக்குதல் மற்றும் வடகிழக்கு குடிசனப் பரம்பலில்  மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்தின் ஊக்குவிப்பு நடவடிக்கை ஆகியன மேலும் மேலும் விரக்தியடைய செய்கின்றன. அரசாங்கத்தின் எந்த முன்னேற்றமும் அர்த்தமுள்ளதாக அமைய தமிழ் மக்கள் அவர்கள் மேல் உறுதியான நம்பிக்கை வைத்திருக்கவேண்டும்.

ஆனால் “வைகாசி 18” நிகழ்வை நடாத்தத் தடை போன்ற அடிப்படை உரிமைப் பிரச்சனைகள் இருக்கும் வரை இதுசாத்தியமற்றது. எங்கள் கடந்த கால நினைவுகளின் துடைத்தழிப்பு என்ற அறிக்கையில் தமிழ் நினைவஞ்சலிகள் எவ்வாறாக அடக்கப்படுகின்றன என்பதை விவரித்துள்ளோம். முள்ளிவாய்க்காலில் நினைவு நிகழ்வு நடாத்த நேற்றுவிக்கப்பட்ட தடை தற்போது நடைபெற்ற வரும் அடக்குமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நாங்கள் அறிக்கையில் கூறியது போல் அரசாங்கம் இந்த தடைகள் தேசிய பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படுகிறன என்று கூறினாலும் பாதிக்கப்பட்ட சமூகம் அதன் உன்னதமான கொடுங்கோன்மையை அனுபவிக்கின்றது.

 

தமிழ் நினைவு செயற்பாடுகளை சிறீலங்கா தொடர்ச்சியாக அடக்குமுறைப் படுத்துவதை எண்ணி PEARL மிகவும் கவலையடைகின்றது. சமீபத்தில் நடைபெற்ற சிவில் சமூக உறுப்பினர் மீதான துன்புறுத்தல் இதில் அடங்கும். தடையற்ற நினைவு நிகழ்வுகள் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளில் ஒன்றாகும். ஆயுதப் போராட்டம் முடிந்து எட்டு வருடங்களகளும். மகிந்த ராஜபக்ச ஆட்சியில் இருந்து விலகி இரண்டு வருடங்ககள்  கடந்த போதிலும் அரசாங்கம் தற்போதும் இத்தகைய முயற்சிகளைத் தடுக்கின்றது. நினைவு கூரல் நிகழ்வு நடாத்துவதற்கான தமிழ் மக்களின் உரிமையில் அரசாங்கத்தின் குறுக்கீடு ஏற்றுக்கொள்ள முடியாதது. இப்படியான நிகழ்வுகளை நடாத்த அனுமதித்தல் இத்தீவில் பொறுப்புணர்வு மற்றும் நீதிக்கான முன் நிபந்தனை மீது தெற்கு சிங்களத்தின் கடினமான உரையாடலுக்களுக்கு இடமளிக்கும்.

தடைகளற்ற நினைவுகூரல் சமாதானத்திற்கு இன்றியமையாதது PDF.